INDIAN DTH vs ISRO
Advertisement

Breaking NOW : INDIAN DTH vs ISRO
#1
Article is written in Tamil , who don't know Tamil please excuse.

(Will try to translate to English)

இந்திய டிடிஎச் நிறுவனங்களும் இஸ்ரோ வின் சொதப்பல்களும்...

இந்தியாவில் தொலைக்காட்சி தன் ஒளிபரப்பை தொடங்கவோ (சி பேண்ட்) டிடிஎச் சேவையை (க்யூ பேண்ட்) தொடங்கவே வேறுவிதமான தகவல் தொடர்புக்கு தேவையான அலைக்கற்றையை இஸ்ரோ நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் மூலமே பெற முடியும். ஆன்ட்ரிக்ஸின் கொள்கைபடி (?) இஸ்ரோவின் செயற்கைகோள்களில் போதிய அலைக்கற்றை இல்லாவிட்டால் மட்டுமே வேறு வெளிநாட்டு தனியார் செயற்கைகோள்களில் அலைக்கற்றை வாங்கி தரும்.ஆனால் , இஸ்ரோ (ஆன்ட்ரிக்ஸ்) எல்லா வாடிக்கையாளர்களையும் பாரபட்சமில்லாமல் நடத்துகிறதா என்பதே இப்போது கேள்வி.

இந்தியாவில் முதன்முதலில் டிடிஎச் சேவையை தொடங்கிய நிறுவனம் டிஷ் டிவி - ஆரம்பத்தில் இஸ்ரோவின் இன்சாட் செயற்கைகோளில் தன் சேவையை ஆரம்பித்தது. பின் அயல்நாட்டு செயற்கைகோளான NSS 6 க்கு மாறியது. இதே காலகட்டத்தில் ஆரம்பித்த அரசின் இலவச டிடிஎச் சேவை டிடி டைரக்ட் + சில காலம் NSS 6 ல் இருந்து செயல்பட்டுவிட்டு இன்சாட் 4B க்கு மாறியது. இங்கு கவனிக்க வேண்டிய சங்கதி இன்சாட் 4B உம் NSS 6 ம் அருகருகே இருக்கக்கூடிய செயற்கைகோள்கள. ஒரு டிஷ் வைத்து இரண்டு செயற்கைகோள்களிலிருந்து சிக்னலை பெற முடியும். டிடி டைரக்ட்+ ன் சேவை இலவசம் என்பதால் டிஷ் டிவி இலவச சேனல்களின் சிக்னல்களை இன்சாட் ல் இருந்தே இப்போதும் பெறுகிறது கிட்டதட்ட 50 சேனல்கள் இதனால் குறைந்தது 2 டிரான்ஸ்பான்டர் மிச்சம் டிஷ் டிவிக்கு. இது தவிர்த்து டிஷ் டிவி ஆசியா சாட் 5 எனும் செயற்கைகோளிலிருந்தும் ஒளிபரப்பை செய்கிறது.தவிர NSS 6 ஆர்பிட்டில் புதிதாக இணைய இருக்கும் SES 8 செயற்கைகோளில் இருந்தும் பிற்பாடு டிஷ் அலைக்கற்றை பெறலாம்.

ஆக மொத்தம் ,

டிஷ் டிவிக்கு இஸ்ரோ ஒதுக்கி இருக்கும் அலைக்கற்றை - 14 டிரான்ஸ்பான்டர்கள் + 2 (மறைமுகமாக) = 432Mhz + 216Mhz + 72MHz (மறைமுகமாக) = 720MHz = 983Mbps

அரசின் இலவச டிடிஎச் நிறுவனமான டிடி டைரக்ட்+ NSS6 ல் இருந்து பின் இன்சாட் 4B க்கு மாறியது. இன்சாட் 4B ல் மின் கோளாறு ஏற்பட்டபின் 5 டிரான்ஸ்பான்டர் களின் வழியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. டிடி டைரக்ட் + அவ்வப்போது இனி 200+ சேனல்களை தரப்போகிறோம் , விரைவில் இன்னும் சேனல்களை அதிகரிக்கப் போகிறோம் என்று சொல்லுவது உண்டு. ஆனால் இருக்கும் 5 டிரான்ஸ்பான்டரில் அவ்வளவு தரமுடியாது என்பது அவர்களுக்கு தெரியும். பின் ஏன் அப்படி சொல்கிறார்கள்? காரணம் இருக்கிறது. இஸ்ரோ 21.05.2011 அன்று விண்ணில் செலுத்திய ஜிசாட் 8 செயற்கைகோள் , இப்போது டிடி டைரக்ட்+ கைவசம் இருக்கும் டிரான்ஸ்பான்டர் எண்ணிக்கையைவிட 5 மடங்கு டிரான்ஸ்பான்டர் கொண்டது. இது அனைத்தும் டிடி டைரக்ட்+ மட்டுமே என சொல்லியதுஇஸ்ரோ.தவிர மற்ற செயற்கைகோளில் இல்லாத ஒரு வசதி இதில் உள்ளது. இந்த செயற்கைகோள் வழியாக ஒளிபரப்பினால் அந்தமான் & நிகோபர் , வடகிழக்கு மாநில மக்களும் ஒளிபரப்பை பெற இயலும். மற்ற செயற்கைகாள்களில் இது முடியாது. ஆனால் , செயற்கைகோள் செலுத்தி முழுதாக 2 வருடம் ஆகியும் அந்த செயற்கைகோள் இன்னும் சோதனையிலேயே இருக்கிறது. டிடி டைரக்ட்+ இன்னும் அந்த செயற்கைகோளுக்கு மாறவில்லை. காரணம் செயற்கைகோள் பழுதாகி இருக்கலாம் அல்லது டிடி டைரக்ட்+ அந்த செயற்கைகோளுக்கு மாறிவிட்டால் டிஷ் டிவிக்கு கிடைக்கும் 50+ இலவச சேனல்கள் கிடைக்காமல் போகும் என்ற அரசியலாகவும் இருக்கலாம்.

ஆக , இதுவரை டிடி டைரக்ட் வசம் இருக்கும் அலைக்கற்றை - 5 டிரான்ஸ்பான்டர்கள் = 180MHz=245.75Mbps

அடுத்ததாக டிடிஎச் சேவையை ஆரம்பித்த நிறுவனம் , டாடா ஸ்கை. இங்கிலாந்தில் மிகப் பெரிய பிரபலமான டிடிஎச் நிறுவனமான ஸ்கை மற்றும் டாடாவின் கூட்டணியில் உருவான டாடா ஸ்கை 2006 ல் சேவையை ஆரம்பித்தது. டாடா ஸ்கை க்கு இஸ்ரோ அலைக்கற்றை ஒதுக்கிய செயற்கைக்கோள் இன்சாட் 4A. இன்சாட் 4A வில் இருக்கும் 12 டிரான்ஸ்பான்டர்களையும் டாடா ஸ்கைதான் உபயோகிக்கிறது. ஆனால் இன்னும் அதிகமான சேனல்களை ஒளிபரப்ப அதிக டிரான்ஸ்பான்டர்கள் வேண்டும் என 2008 ல் இருந்தே இஸ்ரோவிடம் டாடா ஸ்கை கேட்க ஆரம்பித்துவிட்டது. அந்தா இந்தா என்று போக்கு காட்டிய இஸ்ரோ போன வருடம் செப்டம்பர் மாதம் ஜிசாட் 10 என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு செலுத்தியது. இன்சாட் 4A இருக்கும் அதே ஆர்பிட் டில் என்பதால் ஜிசாட் 10ல் இருக்கும் 12 டிரான்ஸ்பான்டர்களும் டாடா ஸ்கை கே கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. டாடா ஸ்கையும் 5 வருட காத்திருப்பு முடிவுக்கு வந்ததாய் நினைத்து அனைத்து டிரான்ஸ்பான்டர்களையும் தனக்கே தர கேட்டது. ஆனால் செயற்கைக்கோள் இன்னும் சோதனை ஓட்டத்தை கூட தொடங்கியதாக தெரியவில்லை. முன்னமே டாடா ஸ்கை வேறு வெளிநாட்டு செயற்கைக்கோளுக்கு மாற கேட்டும் அனுமதி கிடைக்கவில்லை. பொறுத்துப் பார்த்த டாடா ஸ்கை MPEG 4 தொழில்நுட்ப உதவியுடன் சேனல் எண்ணிக்கையை கூட்ட முடிவு செய்திருக்கிறது. அதற்கு ஆகப்போகும் செலவு ரூ 1000 கோடி. அதே ஜிசாட்டில் எதிர்பார்த்த அலைக்கற்றை கிடைத்திருந்தால் டாடா ஸ்கைக்கு அதிகபட்சமாக வருடத்துக்கு 100 கோடி செலவாகி இருக்ககூடும்.

டாடா ஸ்கை வசம் இருக்கும் அலைக்கற்றை - 12 டிரான்ஸ்பான்டர்கள் = 432MHz=589.8Mpbs

இதுவரை பார்த்த கதைகள் இப்படி என்றால் , சன் டைரக்ட் சங்கதியில் இஸ்ரோ ஆரம்பத்தில் இருந்தே குளறுபடியுடன்தான் தொடங்கியது. சன் டைரக்ட் டிடிஎச் க்கு இஸ்ரோ இன்சாட் 4C ல் அலைக்கற்றை ஒதுக்கியது 12 டிரான்ஸ்பான்டர்களுடன் விண்ணுக்கு பயணப்பட்ட இன்சாட் 4C பயணத்தை முடிக்காமலேயே தோல்வி அடைந்தது. அதனால் சன் டைரக்ட் க்கு ஒதுக்கிய அலைக்கற்றை கிடைக்கவில்லை , 2006 ல் ஆரம்பித்திருக்க வேண்டிய சன் டைரக்ட் பிற்பாடு 2007 ஆண்டு இறுதியில் இன்சாட் 4B ல் டிடி டைரக்ட்+ க்கு ஒதுக்கியது போக இருந்த 6 டிரான்ஸ்பான்டர்களுடன் ஒளிபரப்பை ஆரம்பித்தது. சன் டைரக்ட் ஆரம்பித்த புதிதில் டாடா ஸ்கை அதிகாரி சன் டைரக்ட் இன் குறைவான விலையிலான வியாபார அமைப்பு தோல்வியிலேயே முடியும் என சொல்லி இருந்தார் , அதற்கு நேர்மாறாக சன் டைரக்ட் ஒரு கட்டத்தில் டாடா ஸ்கை 3 வருடத்தில் சேர்த்த வாடிக்கையாளர் எண்ணிக்கையை குறைந்த காலத்தில் ஆரம்பித்த 1 வருடத்தில் எட்டியது , பின் இந்தியாவில் முதல் எச் டி சேவை என பாய்ச்சல் காட்ட ஆரம்பித்த சமயத்தில் , ஒரு நாள் காலை சன் டைரக்ட் ஒரு சேனலும் ஒளிபரப்ப இயலாமல் முடங்கியது.காரணம் இன்சாட் 4B ல் ஏற்பட்ட மின்தடை. இன்சாட் 4B ல் 6 டிரான்ஸ்பான்டர்கள் இனி வேலைக்கு ஆகாது என்ற சமயத்தில் சன் ஆசியாசாட் 5 க்கு மாற முயன்றது, அதற்கு இஸ்ரோ ஆசியாசாட் 5 ன் சிக்னல் மத்திய ஆசிய நாடுகள் வரை கிடைப்பதை காட்டி மறுத்ததாக தெரிகிறது (இதே ஆசியா சாட் 5 ல் இருந்து இப்போது டிஷ் டிவி சேவையை தருகிறது!!). பின் சன் டைரக்ட் பாதி சேவை MEASAT 3 க்கு மாறியது அங்கு அதற்கு ஒதுக்கப்பட்டது 4 டிரான்ஸ்பான்டர்கள் , நல்லவேளையாக அதற்கு முன் ரிலையன்ஸ் சன் பயன்படுத்தும் அதே MPEG 4 தொழில்நுட்பத்துடன் MEASAT 3 ல் டிடிஎச் சேவையை ஆரம்பித்து இருந்தது. ரிலையன்ஸ் உடன் ஒரு ஒப்பந்தம் மூலம் ரிலையன்ஸ் இடமிருந்து சில சேனல்களை பகிர்ந்து கொண்டது. தவிர தன் எச் டி சேவையை இன்சாட் 4B ல் இருந்து தருகிறது. ஆனால் , இதற்கு சன் தந்த விலை மிகவும் அதிகம் , அப்போது இருந்த இலட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் டிஷ் திசையை மாற்ற வேண்டி இருந்தது. தவிர நிறைய சேனல்களை நிறுத்த வேண்டியதால் வாடிக்கையாளர்களும் குறைந்தார்கள். தவிர மேலும் சேனல்களை சேர்க்க முடியாத ஒரு இக்கட்டன நிலைக்கு தள்ளப்பட்டது.

சன் டைரக்ட் கைவசம் இருக்கும் அலைக்கற்றை - 4 + 2 (மறைமுகமாக) + 1 - 7 டிரான்ஸ்பான்டர்கள் = 252MHz=344Mbps

ரிலையன்ஸ் தன்னுடைய சேவையை ஆரம்பிக்கும் இஸ்ரோவிடம் அலைக்கற்றை கைவசம் இல்லை அதனால் ரிலையன்ஸ் டிஜிட்டல் டிவிக்கு (பழைய பிக் டிவி) சுருக்கமாக ஆர்டிடிவி க்கு அலைக்கற்றையை மலேசியாவின் MEASAT 3 ல் அலைக்கற்றை பெற்று தந்தது. 9 டிரான்ஸ்பான்டர்கள் மட்டுமே கைவசம் என்றாலும் ஆரம்பத்திலேயே MPEG 4 தொழில்நுட்பத்தை தேர்ந்தெடுத்துவிட்டதால் ஒரளவுக்கு சமாளிக்க முடிந்தது. பின் இன்சாட் 4B பிரச்சனைக்கு பின் சன் டைரக்ட் உம் MEASAT 3 க்கு மாறிவிட்ட பின் ஆர்டிடிவி யினால் புதிதாக அலைக்கற்றை பெற முடியவில்லை.

ரிலையன்ஸ் வசம் இருக்கும் அலைக்கற்றை - 9 டிரான்ஸ்பான்டர்கள் = 324MHz=442Mbps

சன் டைரக்ட்க்கு ஒதுக்கி இருந்த செயற்கைக்கோள் இன்சாட் 4C விண்ணில் ஏவப்படும்போது வெடித்து சிதறியதால் மாற்றாக இன்சாட் 4CR செலுத்தப்பட்டது. இதில் தான் ஏர்டெல் நிறுவனத்தின் டிடிஎச் நிறுவனமான ஏர்டெல் டிஜிடல் டிவி சுருக்கமாக ஏடிடிவி க்கு இஸ்ரோ அலைக்கற்றை ஒதுக்கியது. ஆனால் , இன்சாட் 4CR செலுத்தப்பட்ட போது ஏற்பட்ட பிரச்சனையினால் இன்சாட் 4CR யின் ஆயுள் குறைந்தது. இதனை காரணம்காட்டி ஏடிடிவி வேறு வெளிநாட்டு செயற்கைக்கோளுக்கு மாற விரும்பியது, உடனடியாக SES 7 செயற்கைக்கோளுக்கு மாற்றி தந்தது இஸ்ரோ. SES 7 ல் இன்னும் சில டிரான்ஸ்பான்டர்கள் மிச்சம் இருப்பதால் ஏடிடிவி க்கு தேவை ஏற்படும்போது அலைக்கற்றை கிடைப்பது எளிது , தவிர இதே ஆர்பிட் ல் NSS-11 இருப்பதால் இன்னும் ஏடிடிவி க்கு அனுகூலம்.
ஏர்டெல் வசம் இருக்கும் அலைக்கற்றை - 12 டிரான்ஸ்பான்டர்கள் = 432MHz=589.8Mpbs

இந்தியாவின் மிக இளமையான டிடிஎச் என்றால் அது விடியோகானின் டி2எச். டி2எச் ஆரம்பித்த புதிதில் இருந்தே அதிகமான சேனல்களை தரும் போட்டியை ஆரம்பித்தது. ஆனால் அந்த போட்டியை ஆரம்பித்த அதனால் சேனல் தரத்தை குறைத்த பின்னரும் தொடர முடியவில்லை என்பதுதான் சோகம். அதற்கும் காரணம் இஸ்ரோ , டி2எச் க்கு இஸ்ரோ ஒதுக்கிய செயற்கைக்கோள் ST1 இப்போது ST2 க்கு மாறி உள்ளது. ஆனால் ஏனோ ST2 வில் அதிக அலைக்கற்றையை டி2எச் ஆல் பெற முடியவில்லை.

டி2எச் வசம் இருக்கும் அலைக்கற்றை - 8 டிரான்ஸ்பான்டர்கள் = 474.96MHz=648.4Mbps

*

தனியார் நிறுவனங்களில்

டிஷ் க்கு அதிகபட்சமாக 720MHz ஒதுக்கி இருக்கிறது , குறைந்தபட்சமாக சன் டைரக்ட் க்கு 252MHz இதுவும் சன் , ரிலையன்ஸ் இடம் பகிர்ந்து கொள்ளும் டிரான்ஸ்பான்டர்களையும் சேர்த்து.

டிஷ் க்கு , ஏர்டெல்லுக்கு உடனடியாக அலைக்கற்றை ஒதுக்கிய இஸ்ரோ டாடா ஸ்கை க்கு 5 வருடமாக அலைக்கற்றை கேட்டும் ஒதுக்காமல் இழுத்தடிக்கிறது.

தவிர , டிஷ் , ஏர்டெல் இரண்டுக்கும் நாளை அலைக்கற்றை தேவை என்றால் உடனடியாக கிடைக்கக்கூடிய செயற்கைக்கோள்களில் அலைக்கற்றையை ஒதுக்கி இஸ்ரோ , மற்ற நிறுவனங்களுக்கு அடுத்த

2 வருடங்களில் அலைக்கற்றை அவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்காத இடத்தில் ஒதுக்கி இருக்கிறது.

இவை எல்லாம் தெரியாமல் நடந்தவையா? இல்லை உள்ளுக்குள் நடக்கும் அரசியலா?

2011 ல் டிடி டைரக்ட்+ காகவே செலுத்தப்பட்ட ஜிசாட் 8 க்கு இன்னும் டிடி டைரக்ட்+ மாறாததன் பின்ணணி என்ன? இல்லை ஜி சாட் பழுதாகிவிட்டதா?

இன்சாட் 4c தோல்வி , இன்சாட் 4B , இன்சாட் 4CR பழுது. ஜிசாட் 8 , 10 கதி என்ன என்று தெரியாத தெளிவில்லாத நிலையில். இஸ்ரோ எல்லா நிறுவனங்களுக்கும் நியாயமான அலைக்கற்றையை

ஒதுக்க வேண்டும், அப்படி ஒதுக்க முடியாத பட்சத்தில் (இப்போது அந்த நிலைதான் இருக்கிறது) மற்ற நாடுகளில் இருப்பதுபோது open sky பாலிசியை பின்பற்ற வேண்டும். நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான அலைக்கற்றையை நேரடியாக செயற்கைக்கோள் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும். அதுவே நல்ல போட்டிக்கான சூழலை உருவாக்கும்.

- mailtoviki@gmail.com

* நன்றி

worldofdth.com
dthhelp.net

* குறிப்பு MHz & Mbps ல் குறிப்பிட்டிருக்கும் அலைக்கற்றை தோராய கணக்கு.
[-] The following 1 user says Thank You to Viki for this post:
  • Admin


Forum Jump:


Users browsing this thread: